பொங்கியெழும் உணர்ச்சியலை உந்தித்தள்ள
பொறுமையினை இழந்துவிட்டேன் வாடுகின்றேன்
மங்காத காதல்தீ சூட்டின் வெப்பம்
மருட்டிஎன் உயிரினையே உருக்குதய்யா
தங்கிவிட்ட உன்நினைவு வாழச் செய்தும்
தனித்துவாழும் நிலையென்னைக் கொல்லுதய்யா
எங்கிருந்த போதும்நீ ஓடி வாராய்
என்னின்பப் பெட்டகமே கடிதில் வாராய்
உயிரென்றாய் உயிரெல்லாம் நானே என்றாய்
உலகத்தில் ஒருத்தியே வாழ்வு என்றாய்
மயிலென்றாய் சாயலிலே பாட்டமைத்தாய்
மறப்பதில்லை என்றுநீயும் உறுதி சொன்னாய்
பயிர்வாடும் வான்மழையும் மாறிவிட்டால்
பைங்கொடியும் நான்சாவேன் நீமறந்தால்
உயிரேநீ எங்குசென்றாய்?வருவாய் என்று
உன்வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன்
Saturday, May 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
காதல் நிஜம் என்றால் காத்திருப்பதிலும் ஒரு சுகம்தான் அருமை . நல்லா எழுதி இருக்கீங்க . பகிர்வுக்கு நன்றி
ho.. the longings are spreaded in words so beautifully..
Nice Write-up....
அருமை. வாழ்த்துக்கள்
Post a Comment