நினைவலைகள்
அலையோசையின்றி எங்கும் அமைதி
ஏன்?
சுழலா அல்லது சூழலா?
எண்ணங்கள் ஊர்வலம் புறப்பட்டது.
நினைவலைகள் தொடர்ந்தது.
அலைகள் புரட்டிப் போட்ட பக்கங்கள் கணக்கிலடங்கா
ஜெயகாந்தன் முந்திக் கொண்டார். 30 வாரங்கள் தொடர்ந்தார்.
அடுத்து வருபவரைப் பார்த்தால் --
கண்ட கூட்டம் மயக்கியது
இடையில் கடமை இழுத்தது
வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள்தான் ஐம்பது வாரங்களாகியும் விட்டு விலகவில்லை
கணினி கண்சிமிட்டி அடங்கிவிட்டது
பல குரல்கள் மனப் பேழையைத் திறக்க முயன்றது
ஆழ்மனசக்தி பீடத்தில் இருந்த மனப்பேழையை , அதன் ஒப்புதலின்றி திறக்க முடியுமா?
காலம் கனிநதால் மனப் பேழையும் திறக்கும். அதனுள்ளிருக்கும்
மனச் சிமிழையும்பார்க்கலாம்