Monday, November 21, 2011

நலந்தானா

கடந்த ஒரு வருடமாக வலைப்பூ பக்கம் வர இயலவில்லை.

சுற்றிய கால்கள் சும்மா இருக்கவில்லை. சிகிச்சைக்காக சென்னை வந்தவள் புனிதப் பயணம் முதல் வரலாற்றுப் பயணங்ககள்வரை சென்றேன். இலக்கியக் கூட்டங்கள் சென்றேன். நிறைய நண்பர்களைப் பார்த்தேன். புதியவர்களும் அந்த வட்டத்தில் நுழைந்தனர். கழிந்த மணித்துளிகள் அனைத்தும் மதிப்பு மிக்கவையாக அமைந்தது. அமெரிக்கா திரும்பவும் மகன் ஒரு கேள்வி கேட்டான்

“அம்மா, உங்கள் பயண வாழ்க்கையில் ஏதும் விடுபட்டு விட்டதா?”

ஆமாம். ஒன்று விடுபட்டுப் போயிருந்தது. கடல் பயணம் செய்ததில்லை. உப்பங்கழிகளில் படகு வீடுகள் மூலமாக கொல்லம், கொச்சி, ஆலப்புழை இடங்களில் போயிருக்கின்றேன். என் எண்ணங்களைக் கூறவும் மகன் உடனே ஓர் உல்லாசப் பயணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டான். அட்லாண்டிக் கடலில் சொகுசுக் கப்பலில் பஹாமா தீவுக்குச் சென்றோம். ஒரு வாரம் அந்த ஆழ்கடலில் வாழ்க்கை.

ஏனோ இம்முறை இந்தியா சென்று திரும்பிய எனக்கு ஏக்கம் அதிகமாகி மன அழுத்தம் ஏற்பட்டு முடங்கிவிட்டேன். மீண்டும் உற்சாகம் பெற நாட்களாயின.

இப்பொழுது இருட்டுக் குகையிலிருந்து மீண்டு விட்டேன். இனி தொடர்ந்து வலைப்பூவில் பயணிப்பேன். வாசகர்கள்தான் என் சக பயணிகள்.

இனி அடிக்கடி சந்திப்போம்.

3 comments:

துபாய் ராஜா said...

வணக்கம்.மீள்வருகைக்கு வாழ்த்துக்கள்.

சீதாம்மா said...

ராஜா, நீதானே எனக்கு கணினி ஆசிரியர்.
இன்று நிறைய எழுதுகின்றேன் என்றால் பிள்ளை ராஜாவால்தான் தாய் மகனின் பெருமை கண்டு மகிழ்வாள். இங்கே மகன் தன் தாயின் எழுத்தைக் கண்டு மகிழ்கின்றான்
எல்லாம் இறைவன் சித்தம். இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்
சீதாம்மா

சி.பி.செந்தில்குமார் said...

vவெல்கம் பேக்..

பதிவுல லெட்டர்ஸ் வெரி லார்ஜ் ஐ திங்க்