Saturday, February 2, 2013

வணங்குகின்றேன்


                          வணங்குகின்றேன்
                          ------------------------
நினைப்பதெல்லாம் நடக்குமா?
ஏற்கனவே மனிதன் தன் கால் போன போக்கில் சென்று கொண்டிருக்கின்றான்.
மனிதம் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டுக் கொண்டிருக்கின்றது
மீண்டு வருவோமா அல்லது மாண்டு போவோமா?
சிந்தனைச் சுழல் என்னைச் சூறாவளியாய் சுற்றிக் கொண்டிருக்கின்றது.
ஆர்வத்துடன் ஆரம்பித்த வலைப்பூ
முதுமையின் தள்ளாட்டம். உதவிக்கரம் நீட்டியவர்களும் இருப்பது திண்டாட்டம். நான்கு மாதங்களுக்கு மேலாக வரவில்லை. இனி தொடர்ந்து இதில் பயணம் செய்ய விரும்புகின்றேன். காலம் எனக்கு சக்தியைக் கொடுக்கட்டும்
நான் வலம் வந்த குழுமங்கள் எத்தனை எத்தனை?!
அதுவும் முடங்கியது
எழுதுவதிலும் தள்ளாட்டம். ஆனாலும் வீழாமல் ஒன்றில் மட்டும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
திண்ணையில் என் தொடர் கடந்த 43 வாரங்களாக வந்து கொண்டிருக்கின்றது
ஓர் வரலாற்றுத் தொடர்
ஆம் நம் வரலாறு
நம் வாழ்வியல் வரலாறு
இந்த வலைப்பூ எனது பெட்டகம்
என் எண்ணங்களை என் படைப்புகளைச் சேமித்து வைக்கும் மனச் சிமிழ்
இனி தொடர்ந்து வருவேன்.
நம்பிக்கை கொடுத்தால் கொஞ்சம் கொஞ்சமாக வாசகர்கள் வருவார்கள்
இனி அடிக்கடி சந்திப்போம்

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தொடருங்கள் அம்மா... வாழ்த்துக்கள்...

தொடர நானும் முயல்கிறேன்...

Avargal Unmaigal said...

வணங்கும் உங்களை பாராட்டி, வாழ்த்தி, வணங்கி உங்களது பதிவு பயணத்தில் நான் தொடர்ந்து நிழல் போல வருவேன்.

வாழ்க வளமுடன்

Avargal Unmaigal said...

வணங்கும் உங்களை பாராட்டி, வாழ்த்தி, வணங்கி உங்களது பதிவு பயணத்தில் நான் தொடர்ந்து நிழல் போல வருவேன்.

வாழ்க வளமுடன்

Ranjani Narayanan said...

வயோதிகம் என்பது உடலுக்கு மட்டுமே. மனதிற்கு இல்லை என்பதை திடமாக நம்புபவள் நான். நீங்கள் அதேபோல நினைத்துக் கொண்டு எழுந்து வாருங்கள்.

திண்ணையில் வந்த உங்கள் கட்டுரையின் இணைப்பை இங்கே கொடுங்கள். படிக்க சுலபமாக இருக்கும்.

தொடர்ந்து வாருங்கள். வரவேற்கக் காத்திருக்கிறேன்.